மறைவழி எழுதப்பட்ட அற நூல்கள்
மன்னவன் கோல், அந்தணாளர்தம் அறம்,
வான் மழை இவற்றின் பிணைப்பைப் பலவாறாகக்
கூறுகின்றன.
வள்ளுவமும் பல குறட்பாக்களால்
அதையே வலியுறுத்துகிறது.
தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும்,
குறளுக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமையை
இங்கு காண்போம் -
யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதி⁴க³ச்ச²தி |
ததா² கு³ருக³தாம் வித்³யாம் ஶுஶ்ரூஷுரதி⁴க³ச்ச²தி ||
[2:218]
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு.
[396]
அரக்ஷிதா க்³ருʼஹே ருத்³தா⁴: புருஷேராப்தகாரிபி⁴: |
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
[57]
தூய்மை -
அத்³பி⁴ர்கா³த்ராணி ஶுத்⁴யந்தி மந: ஸத்யேந ஶுத்⁴யதி |
[தர்ம சாஸ்த்ரம்]
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
மேலோர் ஒரே குரலில் பேசுவர்
No comments:
Post a Comment