Wednesday, June 4, 2008

ஜ, ஸ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை அப்புறப்படுத்துவதற்குப்பல தலைகள் அரும்பாடுபட்டு வருகின்றன.'கஷ்டம்' என்பதில் கிரந்தம் நுழைந்துவிட்டது;
அதை ஒழித்துவிட்டு 'கடினம்' எனும் சொல்லைப் பயன்படுத்தப் போகிறேன் - என்று சூளுரைக்கிறது ஒரு தலை.
'கஷ்டம்' , கடினம்' , 'சிரமம்' எல்லாமே வட சொற்கள் தாமே!!
இந்த கிரந்த எழுத்துகள் ஸ்டாலின், ஜேம்ஸ்,ஸ்டெல்லா, இப்ராஹிம், அன்வர் பாஷா போன்ற மேற்கத்திய மொழிச் சொற்களைக் கையாள்வதற்கும் பயனாகின்றனவேபெருந்தலைகளே!!
பைபிளிலும், கொரானிலும் இடம்பெறும் கிரந்த எழுத்துக்களின்மாற்றுருவாக்கப்பணியும் தொடரும் என நம்பலாமா?

1 comment:

திவாண்ணா said...

தேவா, உங்கள் வலைப்பதிவு பிடித்து இருக்கிறது! சுருக்கமாக எழுதுவதில் / படிப்பதில் இருக்கும் இன்பம் தனிதான்1

//.'கஷ்டம்' என்பதில் கிரந்தம் நுழைந்துவிட்டது//

கிரந்தம் என்பது நூல் என்ற பொருளை குறிக்கும் இல்லையா? மொழி வேறு லிபி வேறு. லிபி எழுத்து வடிவம் மட்டுமே. சம்ஸ்கிருதத்தை தமிழர் புத்தக வடிவில் கையாள முயன்ற போது தனி வரி வடிவம் தேவைப்பட்டது. அதற்கு கிரந்த லிபி பயன்பட்டது. நாகரி லிபியிலும் சம்ஸ்கிருதம் எழுதலாம்.