மரம், செடி, கொடிகள் கவடு விட்டுப் பிரிந்து வளர்கின்றன.குடும்பங்களும் பிரிகின்றன; கட்சிகளும் பிரிகின்றன;தேசங்களும் பிரிகின்றன.
ரஷ்யா பல துண்டுகளாகச் சிதறியது.நேரு பாரதத்தை மொழிவாரியாகப் பிரித்தார். மொழி ஒன்றாக இருந்தாலும் வேறு பல காரணங்களுக்காக வட மாநிலங்களில் பிரிவு ஏற்பட்டது. வங்கமும், ஆந்திரமும் என்று பிரியுமோ? தமிழகத்திலும் பிரிவு வரலாம் என்று காதில் விழுகிறது.
ஆன்ம நேயம் பேசும் மத மரபுகளைப் பார்த்தால் அவற்றினுள்ளும் பல பிரிவுகள்.வேத நெறியிலும் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள்.
வழிபாட்டு நெறியிலோ சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவுகள்.
சைவத்தினுள்ளும் சித்தாந்த சைவம், வைதிக சைவம், காச்மீர சைவம் என்ற பிரிவுகள்.
வைணவம் மர்க்கட கிசோரம், மார்ஜால கிசோரம் என்னும் பிரிவுகளோடு திகழ்கிறது.
பவுத்தத்தில் ஹீனயானம், மஹாயானம் .பிரம்ம ஸூத்ரத்தில் வ்யாஸ முனிவர் பவுத்தர்களில் யோகாசாரன்,மாத்யமிகன் போன்ற தத்துவவாதிகள் பலர் இருந்ததைத் தெரிவிக்கிறார்.
சமணர்களிலோ சுவேதம்பரர், திகம்பரர் என்று இரு பிரிவு. சுவேதம்பரர் வெள்ளை ஆடை உடுப்பர்; திகம்பரர் ஆடையின்றி இருப்பர்.
ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற யூத மதத்திலும் அஷ்கென்ஸி, ஸெபார்டி என்னும் இரு பிரிவுகள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலும் கதோலிக்க, ப்ரோடஸ்டன்ட் பிரிவுகள்.
அதற்குப் பின் தோன்றிய மொகம்மதிய மதத்திலும் ஷியா, சன்னி, ஸூஃபி, வஹாபி என்ற பிரிவுகள்.
வெகு அண்மையில் தோன்றிய சீக்கிய மதத்தில் ”தேரோ பந்த்” என்னும் கிளை தோன்றி விட்டது.
எது எப்படியாயினும் பிரிவு என்பது தளர்ச்சிக்குக் காரணமாகாமல் வளர்ச்சியைத் தந்தால் சரி தான்!!
2 comments:
பதிவுகள் நன்றாக உள்ளது.மேலும் எழுதவும்.
"அவரவர் விதிவகை சமயம் தோன்றும்" வகை அமைப்பது அவனே. மனிதனுக்கு சமயங்கள் போதாது என்கிறார் விவேகாநந்தர். பிணக்கு உருவாக்க அல்ல. ஆன்மீக நாட்டம் வளர...
Post a Comment