ஓர் உண்மையான குரு சீடர்களைச் சேர்த்துக்கொள்ளத் தயங்குவான்.
ஏன்?
“சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்.....”
சீடன் செய்யும் பாவங்கள் குருவையே சேரும்.
அவன் மனத் தூய்மையும், தகுதியும் வாய்ந்த சீடனையே சேர்த்துக் கொள்வான்.
குரு ஒருவனுக்குப் பொறுப்புகள் மிகுதி.
குரு என்பவன் சீடனின் ஆன்மிகத் தேட்டத்திற்குப் பொறுப்பேற்று, அவன் உள்ளத்தின் தாபங்களை நீக்கி, அவனுக்கு உய்வு தந்தாக வேண்டும்.
குறி சொல்லிக் கூட்டம் சேர்க்கும் குரு பணமும், பதவியும் வாய்ந்த சீடர்களைத் திரட்டிக் கொண்டு ஆன்மிகம் என்னும் பெயரில் மோசடிகள் செய்து மாட்டிக்கொள்வான்.
இந்த இரு வகையான குருமார்களையும் குறிக்கும் ஒரே வடமொழிச் சொல் –
“சிஷ்யவித்தாபஹாரீ”
”சிஷ்யவித் தாபஹாரீ” – இது ‘ உயர்ந்த சீடனின் தாபத்தை நீக்குபவன்’ எனும் பொருளைத் தருகிறது.
”சிஷ்ய வித்த அபஹாரீ” – இது ‘சீடனின் பணத்தைக் கவர்பவன்’எனும் பொருளைத் தருவதாகிறது.
(வித்தம்-செல்வம்)
3 comments:
“சிஷ்யவித்தாபஹாரீ” =
”சிஷ்யவித் தாபஹாரீ” OR
”சிஷ்ய வித்த அபஹாரீ”
மிகவும் நன்றாக இருக்கிறது :))
Hahaha....nice one sir!
மிகவும் அருமையான சிலேட்ஐ, ரசித்தேன் தொடரவும். கே.வீ.விக்னே
ஷ் சென்னை
Post a Comment