திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் -
உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ள இப்பாடல் பெருமானுடைய (பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை ஆகிய) ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் அனைவர் மனத்தையும் கவர்வதாக உள்ளது.
(நேரிசை ஆசிரியப்பா)
‘அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.’
3 comments:
ஆஹா ! அற்புதமான பாடலை தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள். குறித்து வைத்துக் கொண்டேன். நன்றி
dev sir, what a fantastic song !!
சுவரஸ்யமான கவிதை பாடல் - சொன்னதுபோல எளிய மொழி அமைப்பு - இருந்தும் பாடலின் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Post a Comment